கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பெனடி க்ட்டுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் போன் ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அணுஆயுத திட்டங்களை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது இஸ்ரே ல் ராணுவ தாக்குதல்
நடத்தும் என்று பகிரங்கமாக மி ரட்டல் விடுத்தது. இதற்கு ரஷ்யா உள்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இ தற்கிடையில் ஈரான் விஞ்ஞானிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியது. மேலும் ஈரான் அதிபர் முகமது அகமதிநிஜாத் கூறுகையில், உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை அழித்துவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஈரானுக்கு வர வேண்டும் என்று போப் பெனடிக்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாடிகனுக்கான ஈரான் தூதர் அலி அக்பர் நசரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், போப்பின் வருகையை ஈரான் அதிபர் முகமது மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார். ஈரானுக்கு போப் வருகை தந்தால் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்போம் என்றார். ஆனால், போப் முடிவெடுக்கவில்லை என்று வாடிகன் அதிகாரிகள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக