தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.9.12

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் : ஈரான்


சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடர்ந்தால், சிரி யாவுடன் ஒன்றிணைந்து எதிர் தாக்குதல் நடத்து வோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இரா ணுவ தகவல்களை மேற்கோள் காட்டி, உள்நாட்டு செய்தி ஊடகங்கள் இத்தகவலை முதலில் வெளி யிட்டிருந்தன.எனினும் பின்னர் அவை தமது தளத்தி லிருந்து நீக்கியுள்ளன. ஈரான் அரசு இந்த அறிவிப்பு குறித்து கருத்தேஹ்டும் கூற மறுத்துவிட்டதால் இத ன் உண்மைத்தன்மையில் சந்தேகம் நிலவுகிறது. எ
னினும் சிரிய அதிபர் பஷார்அல் அசாத்திற்கு ஆதரவான போக்கை கொண்டி ருக்கும் ஈரான், அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள்  மத்திய கிழக்கு நாடுக ளில் கால் பதிப்பதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா ஈரான் மீது முட்டாள்தனமான தாக்குதல்களை தொடுத்தால், சிரியாவின் இராணுவத்துடன் ஈரான் கூட்டு சேர்ந்து கொண்டு கடுமையான பதில் விளைவுகளை கொடுக்க வேண்டிவரும் என அந்த எச்சரிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டுமென ஒரு வருடத்திற்கு மேலாக சிரிய மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிரிய கிளர்ச்சி படையினர் அரச இராணுவத்திற்கு எதிராகவும் கடுமையாக போராடி வருகின்றனர். இதில் 6000 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடனடியாக இந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள்  பிரேரணைகள் கொண்டுவந்த போதும் இரு முறையும் சீனா மற்றும் ரஷ்யா ஆகியன தமது வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்தி அப்பிரேரணைகளை நிரகாரித்திருந்தன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போக்கை ஈரானும் தற்போது வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. 

0 கருத்துகள்: