தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.9.12

தம்புள்ளவில் இஸ்லாமிய பள்ளிவாசலை தொடர்ந்து இந்து கோவிலுக்கும் அச்சுறுத்தல்?


தம்புள்ள பிரதேசத்தில், தேர்த்திருவிழா நடத்தும் மு னைப்பில் இருந்த இந்து கோவில் பக்தர்களுக்கு அச் சுறுத்தல் விடுக்கப்பட்டுளதாக தகவல் வெளிவந்து ள்ளது.தம்புள்ள காளி அம்மன் கோவிலில் சுமார் 50 இந்து குடும்பங்கள் இவ்வாறு தேர்த்திருவிழா நடத்த ஆயத்தமாகியிருந்த நிலையில், அதனை நடத்த வே ண்டாம். ஆபத்திருக்கிறது என இந்து பக்தர்களுக்கு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியிருப்பதா க தெரிவிக்கப்படுகிறது.
அப்பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் இந்த திருவிழாவி கற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும், அதையும் மீறி தேர்த்திருவிழா நடத்த ப்பட்டால் உங்கள் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பில்லை என காவல்துறையி னரிடம் தம்மிடம் கூறியதாக இந்து பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சக மதங்களுக்கும் இலங்கை நாட்டில் சம உரிமை இருக்கிறது என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது வருத்தமளிப்பதாக இந்து பக்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் விடுத்துள்ளது.

அண்மையில் தம்புள்ளையில் அமைந்திருந்த இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை அங்கிருது அகற்றுமாறு கோரி பௌத்த பிக்குகளால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: