நேற்று இரவு தொடங்கி இன்று வெள்ளி அதிகாலையும் ஐ .நாவின் பாதுகாப்பு சபை சிரியாவுக்கு எதிரானபிரேரணை குறித்து பலத்த விவாதங்களை நடாத்தியபடி உள்ளது. இ துவரை கிடைத்த தகவல்களின்படி ஐ.நா பாதுகாப்பு சபை அரபுலீக் வழங்கிய ஆலோசனைகளை முழுமையாக ஆ தரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது. கலவரங்களை அ டக்கும் வல்லமையை சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் இழந்துள்ளார். ஆகவே அவர் தனது
அதிகாரங்கள் அனை த்தையும் உப அதிபரிடம் வழங்கி பதவியை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பது அரபுலீக் வைத்துள்ள இறுதி ஆலோசனையாகும். இதை ரஸ்யா விரும்பவில்லை, ஆஸாட்டிற்கு அது ஆதரவாக உள்ளது. எனவே சிரியாவிற்கு எதராக பாதுகாப்பு சபையில் வரவுள்ள தீர்மானத்தை எதிர்த்து ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்று மேலை நாடுகளின் இராஜதந்திரிகள் சற்று முன்னர் முன்னெதிர்வு கூறியுள்ளார்கள். நாட்டை நிர்வகிக்க முடியாத இறுதிக்கட்டத்திற்கு ஆஸாட் வந்துள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தெருவுக்கு தெரு ஆயுதம் ஏந்திய குழுக்களின் அட்டகாசம் பரவிவிட்டது. அந்த நாட்டின் சிவில் சமுதாயத்தை பழையபடி இயங்கு நிலைக்கு கொண்டுவருவது தற்போதைக்கு சாத்தியப்படும் என்று கூற முடியாதளவுக்கு நிலமைகள் கை மீறிப் போய்விட்டன. இலங்கை இனப் பிரச்சனை விவகாரத்தில் மகிந்த ராஜபக்ஷவின் நிலையும் இதுபோல இக்கட்டான இடத்திலேயே தற்போது இருப்பது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக