இங்கிலாந்தில் குடியேற வேண்டுமானால் மாதந்தோறும்நி றைய சம்பாதிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள து. இதற்கு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் குடியேற வேண்டு மா னால், கட்டாயம் ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இங்கிலாந்தி ல் ஆங்கிலத்தில்
பேசினால்தான் ஒருவரை ஒருவர் புரி ந்து கொள்ள
முடியும். கலாசாரத்தை புரிந்து கொண்டு சமூகத்தில் இணக்கமாக இருக்க முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், படிப்பு முடித்த பிற கு வேலை செய்வதற்காக வழங்கப்படும் விசாவை ரத்து செய்ய போவதாகவும் இங்கிலாந்து அரசு அறிவித்தது.
பேசினால்தான் ஒருவரை ஒருவர் புரி ந்து கொள்ள
முடியும். கலாசாரத்தை புரிந்து கொண்டு சமூகத்தில் இணக்கமாக இருக்க முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், படிப்பு முடித்த பிற கு வேலை செய்வதற்காக வழங்கப்படும் விசாவை ரத்து செய்ய போவதாகவும் இங்கிலாந்து அரசு அறிவித்தது.
இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் படிப்பு முடித்து வேலை செய்து வருகின்றனர். தற்போது விசா ரத்து செய்யப்பட்டால் அவர்கள் வேலை இழந்து நாடு திரும்பும் நிலை ஏற்படும். ஐரோப்பிய யூனியனை சேராத வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடு விதிப்பதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் குடியுரிமை பெற அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியேற்றத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் கூறுகையில், ÔÔஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக (31 ஆயிரம் பவுண்ட்) சம்பாதிப்பவர்களுக்கே இங்கிலாந்தில் குடியேற்ற உரிமை வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழங்க இயலாது. மேலும், வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இங்கிலாந்து பிரஜைகள் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் (25 ஆயிரம் பவுண்ட்) சம்பாதிக்க வேண்டும்.
அவர்கள் மட்டுமே மனைவியை இங்கிலாந்து அழைத்து வரமுடியும் என்றார். அமைச்சரின் பேச்சுக்கு இங்கிலாந்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக