தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.12

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதை – எதிர்ப்புகளுக்கு இடையே வெளியீடு


கொல்கத்தா:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் சுயசரிதையான ‘நிர்வசன்’(நாடு கடத்தப்பட்டவர்) தொகுப்பு மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொல்கத்தாவில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.அந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்கு வெளியிலேயே புத்தகம் வெளியிடப்பட்டது.
முன்னதாக இந்த சுயசரிதை புத்தக வெளியீட்டுக்காக, புத்தகக் கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் ஓர் அரங்கு முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த புத்தக வெளியீட்டுக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் அதை ரத்து செய்துவிட்டனர்.
இதையடுத்தே தஸ்லிமாவின் பதிப்பாளரான மக்கள் புத்தக அமைப்பினர் (பிபிஎஸ்) இந்தப் புத்தகத்தை கண்காட்சி அரங்கத்துக்கு வெளியில் வெளியிட்டனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள  சர்ச்சைக்குரிய தஸ்லிமா, “கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் நடைபெறவிருந்த என்னுடைய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள். என்னுடைய புத்தகம் வெளியிடப்படுவதை மதவாதிகள் ஏன் எதிர்க்கிறார்கள். எத்தனைக் காலம்தான் எல்லோரும் இவர்களுக்கு பயந்து வாழப்போகிறார்கள்” என்று டுவிட்டர் எரிச்சலுடன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: