தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.12

திகார் சிறையில் பெண் கைதிகளை பரிசோதிக்க கருவி

இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் கைதிகளை பரிசோதனை செய்வதற்காக திகார் சிறையில் பரிசோத னைக்கருவி(ஸ்கேனர்) நிறுவப்பட்டுள்ளது.இந்த பரிசோ தனைக்கருவி குறித்து திகார் சிறை அதிகாரி நீரஜ் குமார் கூறியதாவது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெ ண் கைதிகள் போதை மருந்துகள், செல்போன் போன்றவ ற்றை கடத்துவதாக தகவல் கிடைத்தது. பெண் கைதிக ளை
பரிசோதனை செய்வதற்கு பெண் பொலிசார் இருப் பினும் கைதிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தராமல் இருந்தனர்.தற்போது திகார் சிறையில் 3 ஆயிரத்து 207 கைதிகள் பல்வேறு குற்றங்களுக்காக அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 46.15 சதவீதம் பெண்களின் எண்ணிக்கையாகும்.


ஆண் கைதிகளின் எண்ணிக்கை 33.47 சதவீதம் மட்டுமே. அதே சமயம் கடத்தல், க‌ொள்ளை ‌போன்ற பெரிய குற்றங்களை செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 10.58 சதவீதமாகும்.
இவர்களை பரிசோதனை செய்வதற்காக சிறையில் தற்போது நிறுவப்பட்டுள்ள ஸ்கேனர் கருவியை இரண்டு சுற்றுக்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. சோதனை திருப்திகரமாக முடிந்தது. இனிமேல் பெண் கைதிகளை எளிதாக பரிசோதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: