தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.12

ஈரான் அணு சக்தியுடன் தயாராகிவிட்டது, வேலைகள் முடிந்தது


மேலை நாடுகள் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கை யை தாமதித்து ரும் இடைவெளியை பயன்படுத்தி அணு  சக்தி தயாரிப்புப் பணியில் ஈரான் முடிவுக்கு வந்துவிட் தாக தெரிகிறது. தமது பணிகள் முடிவடைந்துள்ளன எ ன்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற் கெனவே ஈரான் அணு குண்டை வடிவமைக்கும் புள்ளிக் கு வந்துவிட்டதென அமெரிக்கா அறிவித்துள்ளது. தற் போதய நிலையில் அணு குண்டு தயாரிப்பு விவகாரத்தி ல் ஈரான் ஓர் இராஜதந்திர
முடிவுக்கு வராவிட்டால் தா க்குதலை சந்திக்க நேரிடும் என்று இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின் றன.
இதற்கிடையில் ஈரானுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ரஸ்ய தலைவரான விளாடிமிர் புற்றின் வரும் மார்ச் 4ம் திகதி அதிபர் தேர்தலில் குதிக்கிறார். கடந்த 12 வருடங்களுக்கு முன் தேர்தலில் வென்றது போல ஒரே சுற்றில் இவரால் வெற்றிபெற முடியாதென தெரிவிக்கப்படுகிறது. கருத்துக் கணிப்பில் 40 வீதமே ஆதரவு பெற்றுள்ளார். ஐம்பது வீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடைபெறமாட்டாது. இல்லையேல் இரண்டாவது சுற்று வாக்களிப்பை சந்திக்க வேண்டும். அப்படி சந்திப்பாராக இருந்தார் புற்றினுக்கு தோல்விக்கான வாய்ப்புக்கள் உருவாகலாம். இரண்டு தடவைகள் அதிபராகவும், ஒரு தடவை பிரதமராகவும் இருந்தது போதும். மேலும் பதவி ஆசை வேண்டாம் தேர்தலில் இருந்து ஒதுங்கிவிடு என்று முன்னாள் சோவியத் அதிபர் மிக்கேல் கொர்பச்சேவ் சென்ற மாதம் வேண்டுகோள் விடுத்தும் புற்றின் அதை செவி மடுக்கவில்லை.
அதேவேளை ஈரானுக்கு எதிரான போர் வெடிக்குமானால் அமெரிக்க – இஸ்ரேல் ஏவுகணைகளை வானத்திலேயே தகர்ப்பதற்கான விசேட ஏவுகணை தகர்ப்பு கருவிகளை ரஸ்யா முன்னரே ஈரானுக்கு வழங்கிவிட்டது. ரஸ்ய ஏவுகளை தகர்ப்பு கருவிகள் அமெரிக்க பேற்றியாட் ஏவுகணை தகர்ப்பு கருவிகளை விட சக்தி வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. மறுபுறம்; ஈரானுக்கு எதிரான தடைகள் மின்னல் வேகத்தில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

0 கருத்துகள்: