தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.12

ஐரோப்பாவில் கடும் குளிர் 200 பேர் மரணம்

கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் வீசும் வரலாறு கா ணாத கடும் குளிர் கா ரணமாக இதுவரை 200 பேர் பரிதாப மரணமடைந்துள்ளனர். பல நாடுகளில்குளி ர் – 31 பாகை பரனைற்றுக்கும் கீழே இறங்கி கொலை வாளாய் மாறியி ருக்கிறது. கிழக்கு உக்ரேனிலும், தெற்கு இத்தாலியிலும் இந்த தாக்கங்கள் அதிகமாயுள்ளன. போஸ்னியாவின் பல பகுதிகளில் 2 மீட்டர் உயரத்திற்கு பனி பொழிந்துள்ளது. கு ளிர் – 31 பாகை பரனைற்றுக்குக் கீழேயும் சென்றுவிட்ட து. கடந்த ஆறு நாட்களாக
வெளியே செல்ல முடியாத குளிரில் சிக்குப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே உயிர்ப் போராட்டம் நடாத்து கிறார்கள். உக்ரேனில் 63 பேர் மடிந்துள்ளனர், 40.000 பேர் அவசர உதவி கேட்டுள்ளனர். போலந்தில் 29 பேரும், ருமேனியாவில் 22 பேரும் மரணித்துள்ளனர். பல்கேரியாவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத கடும் குளிர் வீசுகிறது. சைபீரியா 6 பேர், லெற்லான்ட் 10 பேரும் இறந்துள்ளனர். இத்தாலியில் கடந்த 27 வருடங்களில் இல்லாத கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. செக், சுலோவாக், கிறீஸ் ஆகிய நாடுகளிலும் நிலமை இதுவே. சுவீடனில் சில இடங்களில் – 42 பாகைக்கு சென்றுள்ளது. பொஸ்னியாவில் உலங்குவானூர்தி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. புயல், மழையைவிட கடும் பனியே மிகவும் மோசமானதாகும். புவி வெப்படைதலை தடுக்க மறுக்கும் நாடுகள் இழைத்துள்ள தவறுக்கு இன்றைய உலக சமுதாயம் விலை கொடுக்க வேண்டியுள்ளது. குளிரும், பொருளாதார மந்தமும் ஐரோப்பாவை வாட்டி வதைக்க ஆபிரிக்காவில் மோசமான பட்டினி மரணங்கள் உயிர்களை கொத்தாக காவிக்கொண்டிருப்பதாக நேற்றைய செய்திகள் கவலை தெரிவித்தன. நைஜர் நாட்டில் மட்டும் ஆறு மில்லியன் பேர் பட்டினி மரணத்தின் விளிம்பில் நிற்கிறார்கள். மாலி நாட்டில் 2.9 மில்லியன் பேர் ஒரு நேர சாப்பாடில்லாமல் தவிக்கிறார்கள். பயங்கரவாத போரை முடித்துக் கொண்ட உலகம் காலநிலையுடனான பயங்கரப் போரை நடாத்த வேண்டிய பருவம் எதிர் பார்த்ததைவிட அதி வேகமாக வந்துவிட்டது.

0 கருத்துகள்: