தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.12.11

சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு. வரமா? சாபமா?...


நாட்டின் சில்லறை வர்த் தகத்தில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு வர்த்தக நிறுவ னங்கள்  இந்தியாவுக்குள் எளிதில் நுழையும். இதனால் சாதாரண பெட்டிக் கடைகள் முதல் சிறிய, நடுத்தர வியாபாரிகள் வரை பாதிக்கப்படுவார்கள்.ஒரு கட்டத்தில் வருமானம் இழந்து கடையைஇழுத்து மூட வேண்டிய நிலை வரும்.வாழ்க்கை நிர்மூலமாகிவிடும்.... என்கிற அச்சத்தில் சில்லறை

வணிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த பயம் அவசியமா? சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வது எப்படி? இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளை யனிடம் கேட்டோம்.

‘‘அனைத்துத் துறைகளையும் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் எண்ணம்தான் இது. உதாரணமாக தனியார், வெளிநாட்டு வங்கிகளுக்கு அரசு அனுமதி கொடுத்ததைச்  சொல்லலாம். இப்ப நிலைமை என்னாச்சு?

கோக், பெப்ஸி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்த பின்னர், உள்ளூர் குளிர் பானங்களையே காணோமே. ரசாயனங்கள்  சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு வந்த பின்னரும் அந்த நிறுவனங்களை வெளியேற்ற முடிந்ததா?

அடுத்து, ‘உற்பத்தி யாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நடுவே இடைத் தரகர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் விலை குறையும்’ என்கிறார்கள். சரி... நான் கேட்கிறேன்.  காலம் காலமாக கிலோ இருபது ரூபாய்க்கு விற்ற பூண்டு, சமீபத்தில் 300 ரூபாய் வரை போனது. அது எப்படி? ஆனால், இப்போது அதன் விலை 60 ரூபாய். எப்படிக்  குறைந்தது? இப்போது அந்த இடைத்தரகர்கள் எங்கே போய் விட்டார்கள்?

பொதுவாக, உற்பத்தியாகும் ஒரு பொருள் உரிமையாளர், ஏஜெண்ட், சப் - ஏஜெண்ட், வியாபாரி... என நான்கு நிலைகளைக் கடந்துதான் மக்களிடம் போய்ச் சேரும். இதன்  மூலம் சில்லறைக் கடைக்காரர்கள் பயன் பெறுவார்கள். மாறாக, வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்கி விற்கும். இதனால்  சில்லறைக் கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என காரணங்களைப் பட்டியலிடும் வெள்ளையன், காலப் போக்கில் அந்த நிறுவனங்கள் விலையைக் கூட்டிவிடும் என்கிற  ‘பகீர்’ கருத்தையும் பதிவு செய்கிறார்.

பொதுவாக, பொருட்களின் மீது அதிகபட்ச உற்பத்தி, சில்லறை விலைகளை எம்.பி.சி, ‘எம்.ஆர்.பி.’ அச்சிட வேண்டும் என்பது நுகர்வோர் சட்ட விதிகளில் ஒன்று.  ஆனால், அதனை வெளிநாட்டு நிறுவனங்கள் பின்பற்றுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள்.

பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டிவிட்டது. அதனால்தான் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி என்கிறதே மத்திய அரசு?

‘‘இப்படிச் செய்வதால் உடனடியாகப் பணவீக்கம் குறையாது. அதற்கான தேவையோ நிர்ப்பந்தமோ இப்போது இல்லை.

ஒரு விஷயம் தெரியுமா? அவ்வப்போது ஏற்படும் பங்குச் சந்தை வீழ்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை தான் வெளிநாட்டு முதலீ ட்டுக்கு அடிப்படைக் காரணங்கள்.

நாட்டின் 53 நகரங்களில் கால் பதிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கும் உணவு, மருந்துப் பொருட்களை பதப்படுத்தும் முறையைப் பயன்படுத்தி (கோல்ட் செயின்)  பெருமளவில் (50%க்கும் மேல்) ‘ஸ்டாக்’ வைக்கும். தேவைப்படுவோர் அந்த நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை வரும். இதனால் சில்லறைக்  கடைக்காரர்கள் வியாபாரம் பாதிக்கும். விலை உயரும். தொடர்ச்சியாக தொழில் செய்ய முடியாமல் அவர்கள் முடங்கிப் போவார்கள்!’’ என்கிறார் பிரபல நிதி மற்றும்  பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன்.

சரி! அந்நிய நிறுவனங்கள் வந்தால் நன்மைதான் என்கிற குரலும் கேட்கிறதே?

‘‘முழுவதும் அப்படிச் சொல்ல முடியாது. ஆனால், சாதாரணக் கடைகளில் கிடைக்காத அதிக சம்பளம், மருத்துவம், பி.எஃப்... என வேலை செய்பவர்களுக்கு ஓரளவு  வசதிகள் கிடைக்கும். சொல்லப் போனால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு (அன் ஆர்கனைஸ்டு) நிறுவனம் சார்ந்து (ஆர்கனைஸ்டு) வேலை பார்க்கும் வாய்ப்புக்  கிடைக்கும்! அவ்வளவு தான்!’’ என்கிறார் வள்ளியப்பன்.

இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் தேசிகன், ‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் இன்ன பொருளை, இன்ன விலையில்தான் விற்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதா என் பதைப் பார்க்கவேண்டும். ஒரு விஷயம் தெரியுமா? ‘இண்டிகோ’ என்கிற சாயம் நம்மூரில் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. அத்தொழிலை நம்பி பத்து லட்சம் பேர்  இருந்தனர். பின்னர், ஜெர்மன் நிறுவனம் ஒன்று ‘இண்டிகோ ஃபார்முலா’வை எப்படியோ தெரிந்துகொண்டு அதனை செயற்கையாக தயாரித்தது. அதனால், அத்தொழிலையே  நம்பியிருந்த நம்மூர் விவசாயிகள் பத்து லட்சம் பேருக்கு வேலை போச்சு. இப்போது இயற்கையான ‘இண்டிகோ’ சந்தையில் கிடைப்பதில்லை!’’ என்கிறார் தேசிகன்.

சரி! சில்லறை வர்த்தகத்தில் 100% அந்நிய முதலீடு பற்றி சென்னை பாரிமுனையில் எண்ணெய் வியாபாரம் செய்யும் கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?

‘‘உள்நாட்டு பெரிய நிறுவனங்களாலேயே எங்களது வியாபாரம் டல்லடிக்குது. இப்ப வெளிநாட்டு நிறுவனங்களும் வந்தால் கடையை மூடி விட்டுப் போக வேண்டியது தான்’’  என வேதனையை வெளிப்படுத்துகிறார்..
இரண்டு வகை
பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட 53 இந்திய நகரங்களில் அந்நிய நிறுவனங்கள் கடைகளைத் திறக்கும். அவற்றுக்கான அனுமதி இரண்டு வகை. முதலாவது ஒரு  பொருள் சில்லறைச்சந்தை (சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல்). அதாவது குறிப்பிட்ட கம்பெனியின் ஏதேனும் ஒரு பொருளை  (மருந்து, ஷூ, துணி இப்படி...) மட்டுமே விற்பது.  இதில் 100% முதலீடு. மற்றொன்று பல் பொருள்  சில்லறைச் சந்தை (மல்ட்டி பிராண்ட் ரீடெய்ல்). அதில் முதலீடு 51%. இரண்டிலுமே அந்நிய முதலீடு அதிகம் என்பது  தான் எதிர்ப்புக்குக் காரணம்.
என்ன சொல்கிறது சி.ஐ.ஐ.
சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடு குறித்து ‘இந்திய தொழில்கள் கூட்டமை’ப்பின் (சி.ஐ.ஐ.) தலைவர் ரங்கநாத் என்ன சொல்கிறார்?

‘‘நாட்டில் இப்போது இருப்பதைவிட வெளிநாட்டு முதலீட்டின் அளவு அதிகரிக் கும். ஒரே நிறுவனத்தைச் சாராமல், நுகர்வோர் பொருட்களை வாங்க பல்வேறு வாய்ப்புகள்  கிடைக்கும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும்; தொழில் முனைவோர் எண் ணிக்கை உயரும்; உணவு, விவசாயத் துறையில் புதிய தொழில் நுட் பங்கள் வரும்.’’
பயன்கள்?
விலை 5&10% குறையும்; விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு 30% வரை கூடுதல் விலை கிடைக்கும்;  பல் வேறு வரிகள் மூலம்  அரசுக்கு 25&30% வரை  கூடுதல் வருவாய்; ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு; அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு வரும்.
பாதிப்புகள்?
அன்றாடம் 1000 முதல் 5000 வரை வியாபாரம் செய்யும் சிறு, குறு கடைக் காரர்கள் காணாமல் போவார்கள். விவசாயிகள் அந்நிய நிறுவனங்களைச் சார்ந்தே இருக்க  வேண்டிய நிலை உண்டாகும். மக்கள் பேரம் பேச முடி யாது; ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டுமே உயரும். ‘பேக்’ செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே  கிடைக்கும்.

0 கருத்துகள்: