தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.12.11

பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு

லண்டன், நவ. 30- அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளித்துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பூமியை போன்று மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு 'கிளஸி-581ஜி'
என பெரிட்டுள்ளனர்.
இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 123 லட்சம் கோடி மைல் தொலைவில் உள்ளது. இது பூமியை விட 3 முதல் 4 மடங்கு பெரியது. இதன் அருகில் மேலும் 2 கிரகங்களும், அவற்றை சுற்றி 6 பெரிய நட்சத்திரங்களும் இருக்கின்றன.
பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ளது போன்று இந்த புதிய கிரகத்திற்கும் சந்திரன் இருக்கிறது. எனவே அந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளது. அங்கு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவை தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

0 கருத்துகள்: