நோர்வேயில் 76 பேரை கொன்ற படுகொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆனர்ஸ் பிறீவிக் என்ற அடிப்படை இனத்துவேஷ போக்குடைய நபர் தொடர்பாக உளவியலாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை பூசி மெழுகாமல் அம்பலப்படுத்த வேண்டுமென்று உலகளாவிய பயங்கரவாத தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் கேட்டுள்ளார்கள். இப்படியொரு சம்பவத்தை செய்த நபர்
கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். அவரை நன்கு விசாரித்து வெளியிடப்பட்ட உளவியல் அறிக்கையை மறைப்பது தவறு என்று நோஸ்க் சட்டத்தரணி ஆர்வ் செலன்ட் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் இருக்கும் விடயங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தெளிக்காமல் முழுவதையும் அம்பலப்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார். மேலும் அந்த அறிக்கையின் முடிவுரை மிகவும் சுவாரஸ்யமானது. இந்தமாதிரி அவலங்கள் உருவாகும் நச்சு எண்ணங்களின் இருட்பகுதியை வெளிக்காட்டும் முடிவுரை கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த அறிக்கையில் உலகம் அறிய வேண்டியது அதில் உள்ள முடிவுரையே என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து உலகளாவிய ரீதியில் ஏற்படும் அழுத்தம் நோர்வேயின் மனதை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்த அறிக்கை முழுவதும் வெளியானால் அது முழு ஐரோப்பாவிலும் கனன்று கொண்டிருக்கும் வலதுசாரிப்போக்குடைய துவேஷக் கொள்கையாளர் ஆழமாக சிந்திக்க வேண்டிய நெருக்குவாரத்தை ஏற்படுத்தலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக