தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.12.11

பாகிஸ்தானில் நேட்டோ படைத் தாக்குதல்: சீனா கடும் கண்டனம்


பாகிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது நேட்டோ படைகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் பொறுப்பற்ற செயல் குறித்து பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹினா
ரபானி கர், சீன வெளிவிவகாரத் துறையுடன் உரையாடினார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திரம், இறையாண்மையை அமெரிக்கா மதிக்க வேண்டும். நேட்டோ படைகளின் அத்துமீறல் குறித்து உண்மையான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளிவிவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ கூறுகையில், நேட்டோ படைகள் நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது. பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

0 கருத்துகள்: