தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.2.12

தடையை மீறி பஸ் தினம் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு.


சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ்தினம் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை பஸ் தினம் கொண்டாடினார்கள். திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்கள் உடைக்கப்பட்டன.இதில் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச், மாணவர்கள் பஸ்தினம் கொண்டாட போலீசார் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்று போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர், கல்லூரி நிர்வாகம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.
போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட கடந்த ஆண்டே கோர்ட்டு தடைவிதித்துள்ளது. இது பற்றி கல்லூரி நிர்வாகங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இந்த தடையை மீறி பஸ் தினம் கொண்டாடி உள்ளனர். இது தொடர்பாக 13 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
as
இதையடுத்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் கூறியதாவது:-
பஸ்தின கொண்டாட்டத்தின் போது 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் போலீசார் கண்துடைப்புக்காக 13 பேரை மட்டும் கைது செய்துள்ள னர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பஸ் தின கொண்டாட்டம் நடத்தி வன்முறை செய்ததாக 14 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம். வன்முறையில் தொடர்புடைய மற்ற மாணவர்களை கண்டு பிடிக்க கலவர சி.டி.யை எல்லா துறைகளுக்கும் அனுப்பியுள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், தவறு செய்த எல்லா மாணவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 வாரத்துக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: