தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.2.12

மெக்ஸிகோ சிறைச்சாலை கலவரம் : 44 பேர் பலி


மெக்ஸிகோவில் சிறைச்சாலை ஒன்ற்னின் கைதி களுக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தில் 44 சிறை க்கைதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிற து.நூவோ லியோன் மாகாண சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த கலவரம் இட ம்பெற்றதாகவும் அப்போது கடமையிலிருந்த சிறை அதிகாரிகள், பாதுகாப்பு வீரர்களிடம் தற்போது வி சாரணை நடத்தி வருவதாகவும்
காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.இரண்டு
சிறைப்பிரிவுகள் இடையே இம்மோதல் வெடித்ததா கவும் ஒவ்வொரு சிறைப்பிரிவிலும் 750 க்கு மேற்பட்ட கைதிகள் அப்போது உள்ளிருந்ததாகவும், இம்மோதலின் பின்னர் ஒரு சில கைதிகளை காணவில்லை எனவும் காவற்துறை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 மெக்சிகோவின் மூன்றாவது மிகப்பெரிய அபிவிருத்தி அடைந்து வரும் நகரான மொண்டெரிக்கு உட்பட்ட வலயத்தில் வன்முரையில் ஈடுபட்டதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கலவரத்தில் பெரும்பாலானோர் கத்திக்குத்து காயங்களினாலேயே மரணமடைந்துள்ளதாகவும் அவர்களிடம் துப்பாக்கி போன்ற ஆயுதமேதும் கைப்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: