தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.2.12

பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது: கனடா


பாலஸ்தீனத்துக்கு ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் நாடு என்ற அந்தஸ்து வழங்கக்கூடாது என கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், பாலஸ்தீனத்துக்கு கனடா முதலில் ஆதரவளித்தது. ஆனால் தற்போது இஸ்ரேலில் வாழும் யூதர்கள் தங்களின் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அனுபவிக்கின்ற அவலங்களைப் பொறுத்து கொள்ள இயலவில்லை. எனவே பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். கனடா

பாலஸ்தீனத்தை ஆதரித்த போது, பாலஸ்தீனத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 300 மில்லியன் டொலரை வழங்கியது.
மேலும் வெஸ்ட் பேங்க் மற்றும் காஸா பகுதியில் வாழ்ந்த பாலஸ்தீனருக்கும், அகதிகளுக்கும் ஏராளமான மனிதநேய உதவிகளை செய்தது. கடந்த 2009-2010 ஆம் ஆண்டில் மட்டும் 64.61 மில்லியன் டொலரை பாலஸ்தீனத்தின் மேம்பாட்டுக்காக கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
இந்த உதவிகள் மூலமாக பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த நாடாக விளங்கவும், பாலஸ்தீன மக்கள் சுதந்திரமாக ஜனநாயக முறையில் சமாதானமாக வாழவும் தேவையான அடிப்படைகளை உருவாக்க கனடா விரும்பியது என்றார்.
கடந்த மாதம் பெயர்டு இஸ்ரேலுக்குச் சென்ற போது கனடாவை இஸ்ரேலின் மிகச் சிறந்த நட்பு நாடு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோசப் லாவோயி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பான சொற்பொழிவுத் திறன் பெற்ற பெயர்டு தனது உரையில் ஹார்ப்பர், தாட்சர், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரின் கருத்துகளை சுட்டிக் காட்டியதுடன், கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையை நன்கு விளக்கினார் என்றார்.
மேலும் பாலஸ்தீனம், இஸ்ரேல் தவிர வேறு பல நாடுகள் குறித்த தங்களின் கருத்தையும் பெயர்டு தனது உரையில் தெரிவித்தார். சீனாவில் கத்தோலிக்க மதத்தின் போதகர் அரசுக்குப் பயந்து மறைமுக வாழ்க்கை நடத்துவதைச் சுட்டிக் காட்டினார். பர்மாவில் பௌத்தருக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே வேறுபாடுகள் காட்டப்படுவதையும் எடுத்துரைத்தார்

0 கருத்துகள்: