ஐரோப்பாவின் ஒசாமா என்றழைக்கப்படும் அபு கொத்தடா கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். எனவே இவரை ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் ஜோர்டானுக்கு சென்றவுடன் விசாரணை என்ற பேரில் அவரை சித்ரவதைக்கு ஆளாக்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே அங்குள்ள அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார். சித்ரவதை நடைபெறாது என்ற வாக்குறுதி அளித்தால் மட்டுமே அபு கொத்தடா பிரிட்டனிலிருந்து ஜோர்டானுக்கு அனுப்பப்படுவார் என்ற நிபந்தனையை ஜோர்டான் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இல்லையென்றால் இவரை திரும்பவும் கைது செய்து பிரிட்டனின் சிறைச்சாலையிலேயே அடைக்கப்போவதாகவும் தெரேசா மே தெரிவித்தார்.

இவர் கடந்த வாரம் ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றத்தின்படி நிபந்தனை பிணையில் வெளிவந்துள்ளார். ஆனால் தீவிரவாதக் குற்றங்களுக்காக அபுவை ஜோர்டான் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டதால் ஜோர்டானுக்கு அனுப்புகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக