லண்டன், பிப்ரவரி 20- இவ்வாரம், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் பிரநிதிகள் ஈரானுக்குப் பயண மாகவுள்ள நிலையில், தனது அணு சக்தி நிலைய ம் ஒன்றில் யூரேனியம் செறிவூட்டலைப் பன்மட ங்காக செய்யக்கூடிய பணியில் அந்நாடு இறங்கி யுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்குஅமெ
ரிக்காவும் மேற்கு நாடுகளும் பலத்த எதிர்ப்பு தெ ரிவித்து வரும்
இவ்வேளையில், அது குறித்து ஆராய, இவ்வாரத்தில் ஐ.ஏ. இ.ஏ பிரதிநிதிகள் ஈரானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளது. கடந்த மாத, இக்கு ழு ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சில அணுசக்தி நிலைய ங்களை ஆய்வு செய்ய அந்நாடு அனுமதிக்கவில்லை. இம்முறை தடை செய்யப்பட்ட நிலையங்களிலும் இக்குழு ஆய்வு செய்யும் என நம்பப்படுகிறது. மேலும் யூரேனியம் செறிவூட்டலை மும்மடங்காக நடத்தும் நவீனக் கருவிகள் உட்பட, அணு சக்தி தயாரிப்பில் உள்நாட்டு அணுசக்தி தயாரிப்பில் உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம், பன்மடங்கு முன்னேறியிருப்பதாக சமீபத்தில் ஈரான் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் ஈரான் மீதான அச்சம் மேலும் அதிகரித்தது.இதனிடையே தற்போது ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து 156 கிலோ மீட்டர் தொலைவில் போர்டோ என்ற இடத்தில் இயங்கி வரும் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் நவீன ரக கருவிகளை நிறுவும் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகர் தோக்கியோவில், பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு, மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டியை உருவாக்கும் என்பதால், அந்நாட்டின் மீது சர்வதேச சமூகம் கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.ரிக்காவும் மேற்கு நாடுகளும் பலத்த எதிர்ப்பு தெ ரிவித்து வரும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக