தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.12

அடுத்தகட்ட உலகப் பெரும் போர்களுக்கான கருவிகள் தயார்..


ஐரோப்பிய ஒன்றிய பெருமையை பறைசாற்றி நேற் று வானில் பறந்தது..ஐரோப்பிய ஒன்றியத்தை காக்க வும், அதன் பெருமையை உலக அரங்கில் உறுதியுட ன் நிலைநாட்டவும் பிரான்ஸ் மறுபடியும் களமிறங் கியது.அதிநவீன தொழில் நுட்பம், அடுத்த கட்ட போ ருக்கான ஆளில்லாத (விரும்பினால் ஆளும் சேர்ந்து பறக்கக் கூடிய ) புதுவகை நுரசழிநயn உழஅடியவ ன சழநெ விமானங்களின் கன்னிப்பறப்பை நேற்று சனி பிரான்ஸ் வெற்றிகரமாக
மேற்கொண்டது.தெற்குப் பிரான்சில் இருந்து பறப்பெடுத்த
மேற்கண்ட நியூரோன் விமானம் அடுத்த கட் டப் போர்க்களங்களில் முக்கிய பாத்திரம் வகிக்கும், அதுமட்டுமல்ல அமெரிக் கா, ரஸ்யாவுக்கு பிரான்ஸ் கொடுத்துள்ள அதிர்ச்சி மாத்திரையாகவும் இது இருக்கிறது.
406 மில்லியன் யூரோவில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது, இதில் அரைப்பங்கு பணத்தை முதலிட்டது பிரான்ஸ் மிகுதி அரைப்பங்கை சுவீடன், சுவிஸ், இத்தாலி, ஸ்பெயின், கிறீஸ் என்பன வழங்கின, கடந்த 2003 ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் 2030 ல் ஐரோப்பா முழுவதும் தாக்குதல் பிரிவில் முக்கிய விமானமாக இது பணியாற்றும், ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய வடிவமாகவும் இருக்கும்.
பிரான்சிய முன்னாள் அதிபர் ஸார்கோஸி பதவியில் இருந்திருந்தால் இதன் வேகம் மேலும் பல மடங்கு அதிகரித்திருக்கும், அவருடைய தோல்வியை அமெரிக்கா ஏன் விரும்பியது என்பதற்கு அவர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த விமானமும் ஒரு சாட்சியமாகும்.
அதேவேளை அமெரிக்க இராணுவப் பிரிவான பென்ரகன் இதை பரிசோதிக்க விரும்பியுள்ளது, ஆனால் பிரான்ஸ் அதற்கு உடன்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காரணம் உலகத்தில் எவரிடமும் இல்லாத ஆயுதத்தை வைத்திருப்பதே தற்போதைக்கு பாதுகாப்பானது மேலும் அதுவே ஐரோப்பிய ஒன்றிய பெருமைக்கு அவசியமானதுமாகும்.

0 கருத்துகள்: