தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.12

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1


2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியா கக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக ந ம்பப்பட்டு வருகின்றது.(அச்சப்பட்டு) இந்த அச்சத் தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video confe rence) மூலம் உலக அழிவு
குறித்து பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்
தனர்.இக் கூட்டத்துக்கு சமூக ஊடகப் பாவனையா ளர்களும் அழைக்கப் பட்டிருந்தனர். மேலும் இதில் விவாதிக்கப்பட்ட உலக அழிவுகள் குறித்தும் அவை எவ்வாறு ஆதாரமற்றவை என நாசா கொடுத்த விளக்கமும் கீழே -

1.நிபிரு அல்லது கோள் X பூமியுடன் மோதும் -

இது பண்டைய சுமேரியர்களின் நம்பிக்கை. தற்போது பிளானெட் X என அழைக்கப்படும் இந்த நிபுரூ கோள் ஒவ்வொரு 3600 வருடங்களுக்கும் ஒவ்வொரு முறை சூரியனைச் சுற்றி அதன் ஒழுக்கில் வருவதாகவும் இவ்வருடம் டிசம்பர் 21 இல் பூமியின் ஒழுக்கில் இது வந்து பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையை 1983 ஆம் ஆண்டே மறுத்திருந்த நாசா இவ்வாறு கூறியுள்ளது. அதாவது நாசாவின் நவீன அகச்சிவப்புக் கதிர் தொலைக்காட்டியால் எடுக்கப்பட்ட 350 000 படங்களிலும் இதன் அடையாளம் இல்லை எனவும் இதை ஏனைய சக்தி வாய்ந்த தொலைக்காட்டிகளும் நிரூபித்துள்ளன எனவும் கூறியுள்ளது.

2.அனைத்துக் கோள்களும் நேர்கோட்டில்  வருவதால் அழிவு உண்டாகும் -

இந்நம்பிக்கைப் படி 2012 டிசம்பர் 21 ஆம் திகதி சூரியன், பூமி மற்றும் ஏனைய கிரகங்கள் தமது ஒழுக்கில் நேர்கோட்டில் வருவதுடன் அவற்றை இணைக்கும் கோடு பால்வெளி அண்டத்தின் (Milkyway galaxy) மையத்தை நோக்கி அமையும். இதனால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள அதி நிறை கருந்துளையால் (Supermassive blackhole) ஈர்க்கப்பட்டு அதன் அதீத ஈர்ப்பு விசையால் சிதறடையும் அல்லது ஏனைய கிரகங்களுடனான ஈர்ப்பினால் பாதிக்கப்பட்டு ஒன்றுடன்
ஒன்று மோதிக் கொள்ளும் என்பதாகும்.

இதற்கு நாசா கொடுக்கும் விளக்கம், பூமி சூரியன் மற்றும் ஏனைய கிரகங்களுடன் பால்வெளி அண்டத்தின் மையத்தோடு ஒரே நேர்கோட்டில் வருவது ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நிகழும் சம்பவமாகும். அதிலும் இவ்வருட இறுதியில் அமையவுள்ள இந்த ஒழுங்கு மிக நேர்த்தியானதல்ல. இந்த ஒழுங்கு நிகழ்வது உண்மை என்ற போதும் இதனால் அழிவு ஏற்படும் என நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான உறுதியான ஆதாரம் இல்லை.
3.பூமியின் தரை மேற்பரப்பு 180ட டிகிரியில் சுற்றும் -

இந்நம்பிக்கைப் படி டிசம்பர் 21 இல் புவியின் தரை மேற்பரப்பு தனது 180 டிகிரிக்கு சுழற்சியை மாற்றுவதன் மூலம் துருவப் பகுதிகளை இடம்மாறசெய்யும் எனவும் இதனால் உலக சனத்தொகை முற்றிலும் அழிந்து விடும் எனக் கருதப்படுகின்றது. இதற்கு நாசா அளிக்கும் விளக்கம் பூமிக்கு இருவகையான துருவங்கள் இருப்பதாகவும் அவை புவியியற் துருவங்களின் சுழற்சி மற்றும் காந்தப்புல அம்சங்கள் எனவும் கூறப்படுகின்றது. இதில் காந்தப்புல துருவங்கள் நிலையான ஒரு இடத்தில் பொருத்தப் பட்டவையல்ல என்பதுடன் ஒவ்வொரு வருடமும் இது சிறிதளவு புவியியற் துருவங்களுக்குள் ஊடுருவும். இதன் காரணமாக ஒவ்வொரு 400 000 வருடங்களுக்கு ஒரு முறையே துருவப்பகுதிகள் இடம்மாறும்.

மொரிஷன் எனும் விஞ்ஞானியின் கூற்றுப்படி இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடமாற்றம் சாத்தியமில்லை. இந்த மிகச் சிறிய விஞ்ஞான உண்மை
மத புராணக் கதைகளால் திரிவு படுத்தப்பட்டு மூட நம்பிக்கையாக வளர்ந்துள்ளது.
கவனிக்க : இக்கட்டுரையின் நீளம் கருதி இரு பகுதிகளாக வெளிவருகின்றது. இதனது மற்றைய பகுதி நாளை பிரசுரமாகும்
நன்றி:4தமிழ்மீடியா

0 கருத்துகள்: