தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.12

சிரியாவில் இணையம் மற்றும் விமான சேவைகளை துண்டிக்கப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம்


வன்முறைகள் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என் பதற்காக சிரிய அரசு வேண்டுமென்றே உள்நாட்டில் இணைய சேவையும், விமான சேவையும் துண்டிக்க ப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கடந் த சில தினங்களாக சிரியாவின் தலைநகர் டமஸ்க ஸ்ஸில், விமான சேவை, இணையத்தள பாவனை யும் மற்றும்  தொலைபேசி சேவை என்பன துண்டிக் கப்பட்டிருந்தன.  கிளர்ச்சியாளர்களுடன்
ஏற்பட்டிரு ந்த கடும் மோதலின் நிமித்தம் இவை தடைபட்டதாக சிரிய அரசு தெரிவித்திரு ந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நண்பகல், டமஸ்கஸ்ஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் பிரதான பாதை மறுபடி திறக்கப்பட்டு விட்டதாகவும்,  விமான சேவைகளும் திரும்ப ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிரிட்டனை மையமாகக் கொண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்  தெரிவித்துள்ளது.

இதேவேளை டமஸ்கஸ்ஸில் கடந்த இரு நாட்களாக அதிகரித்திருந்த வன்முறை காரணமாகவே இணையச்சேவை தடைபட்டிருந்ததாகவும், தற்போது அவை வழமைக்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  எனினும் இச்சேவை எத்தனை இடங்களில் மறுபடி வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இதேவேளை ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் சிரிய அகதிகளின் மொத்த எண்ணிக்கை ஜனவரியில் 700 000 (7 இலட்சம்) ஐ எட்டி விடும் என எச்சரித்துள்ளார்.

0 கருத்துகள்: