நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.உத்தரபிரதேசத்திலுள்ள மொத்தம் 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி 402 இடங்களிலும் ஆளும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்க
ளிலும் போட்டியிட்டன. இதில், சமாஜ்வாடி கட்சி 182 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் முன்னேறி வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி 94 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்திலும் பாஜக 48 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது இடத்திலும் காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் முன்னிலை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக