பிராமணர்கள், எதற்கும், எவருக்கும் பயப்பட மாட்டோம், பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை, என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கூறியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) மாநிலத் தலைவர் என். நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, பிராமண சமூகத்தினரை சம்மந்தமின்றி அர்த்தமற்ற முறையில் விமர்சனம்
செய்துள்ளார்.(கருணாநிதி வெளியிட்ட புள்ளி விவரத்தையோ, தகவல்களையோ மறுக்க வில்லை)இந்த செயலை தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) வன்மையாகக் கண்டிக்கிறது. பிராமணர்கள் ஆண்டவனுக்கும், தர்மத்திற்கும், சத்தியத்திற்கும் பயந்தவர்கள். வேறு எதற்கும், எவருக்கும் பயப்பட மாட்டோம், பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. பிராமணர்களுக்கு எதிராக பேசிய, கருணாநிதி மீது மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக