தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.3.12

அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற வகுப்புக் கல வரங்களின் 10-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்காவி ல் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.அமெரிக் காவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்பு கள் ஒன்றிணைந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மோடிக்கு எ திராகவும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களு க்கு நீதி வேண்டியும்
கோஷமெழுப்பினர்."இனப்படு கொல களுக்கு எதிரான கூட்டமைப்பு'
என்ற அணியாக 100-க்கும் மேற்பட்டவர் கள் ஒன்று திரண்டிருந்தனர். மன்ஹாட்டனில் நடைபெற்ற இந்தப் போராட்டம் காந்தி சிலைக்கு அருகில் நடபெற்றது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர். பெண்களும், சிறுவர்களும் மோடிக்கு எதிராகவும், குஜராத் அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட "இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின்' கிழக்குப் பகுதியின் துணைத் தலைவர் முகமது யூசுப் கடானி, காந்தி கனவு கண்ட இந்தியா வேண்டுமா அல்லது மோடியின் இந்தியா வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவே காந்தி சிலைக்கு அருகில் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார்.

குஜராத்தில் இனக்கலவரம் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆன பின்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், அவர்கள் மீது மாநில அரசு கருணை காட்டவில்லை என்றும் யூசுப் தெரிவித்தார். இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றாலும், அவர்களின் இறப்புக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை அளிப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்கா வரத் திட்டமிட்டபோது இந்த அமைப்பே கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மோடியின் விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவருக்கு அளிக்கப்படும் ராஜாங்க ரீதியான அந்தஸ்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியது.

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையில், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை என்றும், மாநிலத்தில் மதச் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையிலேயே மோடிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

0 கருத்துகள்: