ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறை கேடு செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். உலகின் வல்லரசு நாடு களில் ஒன்றான ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தற்போதைய பிரதமர் விளாடிமிர் புதின், கென்னடி ஷியூகனோவ் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பிரதமர்
விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். அவர் 64 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கென்னடி ஷியூகனோவ் 17 சதவீதம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.
புதின் வெற்றி பெற்றதை அவரது கட்சியினர் ரஷியா முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தலைநகர் மாஸ்கோவில் திரண்ட சுமார் 10 ஆயிரம் பேர் கையில் ரஷிய கொடியை ஏந்தியபடி கிரம்ளின் மாளிகைக்கு பேரணியாக சென்றனர். புதினை வாழ்த்தும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி இருந்தனர். அதில், புதின் எங்களது அதிபர். நாங்கள் அவரை நம்புகிறோம் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இதற்கிடையே, தனது ஆதரவாளர்கள் முன்பு புதின் தோன்றினார். அவருடன் தற்போதைய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் இருந்தார். அப்போது பேசிய புதின், தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நாம் வெற்றி பெற்று விட்டோம். நியாயமான முறையில் தேர்தல் களத்தை சந்தித்து மக்கள் ஆதரவில் வென்று விட்டோம். அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும்.
நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை என்றார். அப்போது அவரது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால், புதினின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டனர் என கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கென்னடி ஷியூகனோவ் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் செல்வாக்கு மங்கிய நிலையில் அவர் எப்படி வெற்றி பெற முடியும். எனவே, அவ ரது வெற்றியை எதிர்த்து எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை புதின் ரஷியாவின் அதிபராக பதவி வகித்துள்ளார். ரஷியா சட்டப்படி தொடர்ந்து ஒருவர் 3 முறை அதிபர் பதவி வகிக்க முடியாது. எனவே, அவர் கடந்த தேர்தலில் தனது ஆதரவாளர் டிமிட்ரி மெத்வதேவை அதிபராக்கி விட்டு தான் பிரதமர் பதவி வகித்தார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டியிட்டு 3-வது முறையாக மீண்டும் அதிபராகி உள்ளார். இவர் 6 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக