தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.3.12

சீனா: சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்து சமையல் செய்த மரணமடைந்த 95 வயது மூதாட்டி.


சீனாவின் காங்ஸி மாகாணத்தில் உள்ள பெய்லியு நகரை சேர்ந்தவர் லீ ஸியுபெங்க். வயது 95. தனியாக வசித்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் சென் குயிங்வாங் என்பவர் கடந்த வாரம் அவரை எழுப்ப சென்றார். அப்போது லீ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவரை உலுக்கி பார்த்தார்.
அசைவு எதுவும் இல்லாததால், இறந்து விட்டார் என்று நினைத்தனர்.
பின்னர் குயிங்வாங்கும் அவரது மகனும், லீயின் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அதற்காக சவப்பெட்டி வரவழைக்கப்பட்டு அதில் லீயின் உடலை கிடத்தினர். பின்னர் உறவினர்கள், நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக உடல் 2 நாட்கள் வீட்டில் வைக்கப்பட்டது.
சீன முறைப்படி உடல் அடக்கம் செய்வதற்கு முந்தைய நாள், சவப்பெட்டியில் இருந்த லீயின் உடல் காணவில்லை. குயிங்வாங் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களில் தேடினார். அப்போது சமையல் அறையில் இருந்து சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அங்கு லீ சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நீண்ட நேரம் தூங்கி விட்டேன். எனக்கு பசியாக இருந்தது. அதனால் சமையல் செய்து கொண்டிருக்கிறேன் என்று லீ சர்வ சாதாரணமாக சொன்னதை கேட்டு ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இது செயற்கை மரணம் என்று சொல்வார்கள். பேச்சு மூச்சின்றி இருப்பார்கள். ஆனால், உடல் சில்லிட்டு போகாது. உஷ்ணத்துடனே இருக்கும் என்றனர். நல்ல வேளை சீன முறைப்படி இறுதி அஞ்சலிக்காக வீட்டில் 2 நாட்கள் வைத்திருந்ததால் லீ பிழைத்தார். உடனடியாக புதைத்திருந்தால் ஒரு உயிர் போயிருக்கும் என்று டாக்டர்கள் கூறினர்.

0 கருத்துகள்: