ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பர்தா, ஹெல்மட் அணிந்து செல்பவர்களின் முகத்தை அடையாளம் காண போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.இந்த புதிய சட்டம் ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தா அல்லது முகத்தை மட்டும் மறைத்து
செல்கின்றனர். இதனால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறி வந்தனர்.இதையடுத்து, பர்தா அணிந்து செல்பவர்கள், ஹெல்மட் அணிந்து செல்பவர்கள் யார் என்று அடையாளம் காண நீதித்துறை மற்றும் போலீசாருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த டிசம்பர் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக