தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.3.12

எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!


பெங்களூர்:அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற வழக்கில் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மூன்று தடவை சம்மன் அனுப்பிய பிறகும் ஆஜராகதாதால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக இருந்தபோது, அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக ஷிராஜின் பாஷா என்பவர் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில், எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வரும் 24ஆம் தேதி லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மூவரும் ஆஜராக வேண்டும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி சுதிந்திர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
எடியூரப்பா, அவரது 2 மகன்கள், மருமகன், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.கிருஷ்ணய்ய ஷெட்டி ஆகியோர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து வழக்குகளில் 2 இல் ஏற்கனவே எடியூரப்பா ஜாமீன் பெற்றுள்ளார்

0 கருத்துகள்: