தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.3.12

ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு படை வீரர்கள் மீது 304 வழக்குகள் பதிவு: சட்டசபையில் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், மாநிலத்தின் சட்டம் ஒ ழுங்கு குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கா ன பதிலறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-கா ஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில், பாதுகாப்புப் படை யினரின் அத்துமீறல்கள் காரணமாக மொத்தம் 304 வழ க்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் முதல் குற் றப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள து. இவற்றில் 230 வழக்குகள் நீதிமன்றங்களில் விசார ணையில் உள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர், நாட்டின் விவகா ரமான மாநிலமாகும். ஏனென்றால் ஒருபக்கம் தீவிரவாத செயல்கள் மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தாலும் மறுபக்கம் நாட்டை காக்க வேண்டிய ராணுவ மும், பாதுகாப்புப் படையினரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மக்களை துன்புறுத்துவார்கள்.
இந்த இரண்டு பிரிவினர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைப் பொழுதை கழிப்பது முள் மேல் விழுந்த திரைச்சீலைக்கு ஒப்பாகும்.

0 கருத்துகள்: