தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.2.12

சோமாலியாவில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் துரத்தியடிக்கப்பட்டது


சோமாலியாவில் உள்ள அல் சபாப் இராணுவ அமைப்பு செஞ்சிலுவைச் சங்கம் இனிமேல் அங்கு செயற்படமுடி யாதென விரட்டியுள்ளது. இவர்களின் இந்த பொறுப்பற் ற முடிவால் பட்டினியில் வாடும் சுமார் 1.1 மில்லியன் மக்களின் எதிர்காலம் உயிராபத்து மிக்கதாக மாறியுள் ளதாக செஞ்சிலுவைச்சங்க தலைவர் ஆனஸ் லிதாக்கி ரி தெரிவித்தார். சோமாலிய தலைநகர் மொகடிசுவில் ம ட்டும் இரண்டு பெரிய வைத்தியசாலைகள் மருந்துஉண வுத் தட்டுப்பாட்டில் தவிக்க
வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது.
அதேவேளை செஞ்சிலுவைச் சங்கத்தை இவர்கள் விரட்டியடிக்க காரணமென்ன..? அது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ஆனால் சென்ற வாரம் அமெரிக்க மரைன் படைப்பிரிவினர் பின்லேடனை இரகசியமாக மடக்கிப் பிடித்தது போல சோமாலிய கடற்கொள்ளையரையும் தாக்கினார்கள். இரண்டு தொண்டு ஊழியர்களை மீட்டும் வந்தார்கள். இந்தத் தாக்குதல் கடற் கொள்ளையருக்கு பாரிய தோல்வியாக அமைந்திருந்தது. அவர்களில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். மீட்கப்பட்ட அமெரிக்க பெண்மணி ஜசிக்கா புச்சனர் இன்று அமெரிக்கா திரும்புகிறார். மீட்கப்பட்ட 60 வயதுடைய டேனிஸ்காரர் இன்னமும் டென்மார்க் வந்து சேரவில்லை. இந்த கோபம் சோமாலியாவுக்கு பாரிய பிரச்சனையாக உருவாகும். அமெரிக்கர் இறங்கியதால் இஸ்லாமிய அமைப்புக்களின் எதிர்ப்பு எழுவதும் இயற்கையே.
இது இவ்விதமிருக்க கடற் கொள்ளையரை மடக்கவும், அவர்களிடமிருந்து டேனிஸ் வர்த்தகக் கப்பல்களை மீட்கவும் கப்பல்களுடன் படையினரை அனுப்புவதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இரு தரப்பிற்கும் துப்பாக்கி மோதல் நடந்தால் கூட இருக்கும் மாலுமிகள், பொருட்களின் பாதுகாப்பு பாரிய சிக்கலாகும். தவிர்க்க முடியாத நிலையில் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டால் அதன் பின்னால் வரும் சட்டச்சிக்கல்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது..? இது குறித்து விரிவான சட்டவரையறைகள் இல்லை என்று கடற்கொள்ளையர் விவகார நிபுணர் தெரிவிக்கிறார்கள்.

0 கருத்துகள்: