பொருளாதார நெருக்கடியால் தடத்தில் மாட்டிக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்…உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தில் இருந்து மீண்டெழுவதற்காக ஐ ரோப்பிய ஒன்றிய தலைவர்களால் அறிமுகம் செய்யப்ப ட்ட யூரோபாக்ட் பொருளாதார சீர்திருத்த அறிக்கை உட ன்பாட்டுக்கு வந்தது. மேற்கண்ட அறிக்கையை பிரிட்ட ன், செக் ஆகிய இரு நாடுகளைத்தவிர மற்றய நாடுகள் ஏ ற்று கையெழுத்திட்டுள்ளன.புதிய பொருளாதாரத் திட்ட த்தில் முன்னர்
ஒதுக்கப்பட்ட தற்காலிக நிதியான ஈ.எப்.எஸ்.எப்பிற்கு மேலதிகமாக புதிய பாதுகாப்பு நிதியான ஈ.எஸ்.எம் ஒதுக்கப்பட்டது. இதை சுவீடன் தவிர 27 நாடுகள் ஏற்றுள்ளன.மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் ஐந்து பேருக்கு ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்களை வேலைச்சந்தைக்கு கொண்டுவருவதை முதன்மைப்படுத்தி பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமான பகுதி பட்ஜட் டிசிப்பிளினாகும். ஒவ்வொரு நாட்டின் வரவு செலவுத்திட்டமும் மொத்தத் தேசிய உற்பத்தியில் 0.5 வீதத்திற்குக் கீழ் செல்லாமல் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். ஆனால் சுவீடன், பின்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய மூன்று நாடுகளைத்தவிர மற்றைய எந்த நாடுமே பற்றாக்குறை இல்லாத வரவு செலவுத்திட்டத்தை உடைய நாடுகள் அல்ல, இவை எப்படி ஐரோப்பிய ஒன்றிய புதிய நிபந்தனையை நிறைவேற்றப் போகின்றன என்பது முக்கிய கேள்வியாகும்.
தற்போது ஐரோப்பிய ஒன்றிய தலைமையை ஏற்றுள்ள டென்மார்க் இந்தத் திட்டம் தமக்கு மகிழ்வு தருவதாக தெரிவித்துள்ளது. தமது நாடும் இந்தக் கட்டுப்பாடு மிக்க பொருளாதார ஒழுக்க நெறியை மேற்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறியுள்ளது.
அதேவேளை ஐரோப்பாவில் வறுமையில் வாடுவோரை அளவிடும் வறுமைக்கோடு பல நாடுகளில் முறிவடைந்து கீழ் நோக்கிக் குறைந்து வருகிறது. ஆனால் டென்மார்க்கில் மட்டும் இந்தக் கோடு பல வருடங்களாக வீழ்ச்சியின்றி தொடர்கிறது. டேனிஸ் அரசியல்வாதிகளால் இந்த வறுமைக் கோட்டை கீழ் நோக்கி வீழ்த்த முடியவில்லை என்று நேற்றய கிறிஸ்லி டவ்பிலத பத்திரிகை தெரிவித்துள்ளது. எனினும் டேனிஸ் அரசியல்வாதிகளுக்கு இந்தத் திட்டம் பற்றியேறுவதற்கு ஓர் ஊன்றுகோலாக அமைய வாய்ப்புள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அமல் செய்யவுள்ள பொருளாதார புதிய பொருளாதார அறிக்கை வரும் மார்ச் மாதம் வாக்கெடுப்பிற்கு வந்து, 1ம் திகதி யூலை மாதம் அமலுக்கு வரவுள்ளது. கையெழுத்து வைத்த நாடுகள் ஐரோப்பாவின் கயிற்றுத்தடத்தில் வசமாக மாட்டிவிட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக