தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.2.12

மும்பையில் வாக்காளருக்குப் பணம் : இந்தியக் குடியரசுத் தலைவர் மகன் மீது குற்றச்சாட்டு!

வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முயற்சித்தார் என இந் தியக் குடியரசு தலைவர் பிரதீபா படேலின் மகனும், காங்கி ரஸ் எம் எல் ஏவுமான ராவுசாஹிப் செகாவத் மீது எதிர்கட்சி கள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பில் அறிய வருவதாவது;எதிர் வரம், 16ந்தேதி மும்பை நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலி ல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், மிக த் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரப் பணிகளைச் செய்து வருகி ன்றன. இதேவேளை
இப் பணிகளின் போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவா டா செய்வதைத் தடுக்கும் பொருட்டு, காவல்துறை கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றின்போது, வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டுக் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சுமார் 1 கோடி ரூபாய் பணவிவகாரத்தில், இந்தியக் குடியரசு தலைவரின் மகன் தொடர்புபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக அறிய வருகிறது.
ஆயினும் இந்தக் குற்றசாட்டை நிராகரித்த ராவுசாஹிப் செகாவத், பொருளாதார பலமற்ற வேட்பாளர்களுக்குக் கொடுப்பதற்காகவே மும்பை காங்கிரஸ் தலைமையிடமிருந்து மேற்குறித்த பணம் பெறப்பட்டதாகவும், இது வேட்பாளர்களின் செலவுகளுக்காகப் பெறப்பட்ட பணம் எனவும் தெரிவித்துள்ளார்.
 இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளான பாஜக, சிவசேனா ஆகியவை, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்காகவே கொண்டு செல்லப்பட்ட பணம் என்றும், இது குறித்து கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

0 கருத்துகள்: