முஸ்லிம் நாடான மாலத்தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் புரட்சி வெடித்தது. அதையடுத்து அதிபராக இருந்த முகமது நஷீத் பதவி விலகினார். புதிய அதிபராக வாகீத் ஹசன் பொறுப்பு ஏற்றார்.நஷித் பதவி விலகுவதற்கு முன்பு ஒரு வாரமாக போராட்டம் நடந்தது. அப்போது நடந்த வன்முறை சம்பவங்களின் போது தலைநகர் மாலேவில் உள்ள அருங்காட்சியகம் (மியூசியம்) மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, அது உடனடியாக மூடப்பட்டது.
தற்போது மாலத்தீவில் அமைதி திரும்பிய நிலையில் நேற்று மீண்டும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் மற்றும் இந்து கடவுள்களின் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டு சேதம் அடைந்து கிடந்தன. அதுபோன்று 35 சிலைகள் சின்னாபின்னாமாகி இருந்தன. அவை அனைத்தும் மணல், பவளம் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அறிய வகை சிலைகளாகும்.
இங்கு கடந்த 1962-ம் ஆண்டு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அன்று முதல் இந்த சிலைகள் இங்கு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் சிதிலமாக்கப்பட்டு விட்டன. அவை 6-ம் நூற்றாண்டு சிற்பங்களாகும்.
புரட்சியின் போது பழமை மதவாதிகள் இவற்றை உடைத்து நொறுக்கியதாக அருங்காட்சியக இயக்குனர் அலி வாகித் தெரிவித்தார். தெற்காசிய மாநாட்டின் போது முஸ்லிம் நாடான பாகிஸ்தான் மாலத்தீவு அதிபரிடம் அரிய புத்தர் சிலை ஒன்றை பரிசளித்து இருந்தது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த போராட்டத்தின் போது அந்த சிலையை ஒரு கும்பலுடன் அடித்து நொறுக்கியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக