சிங்கப்பூரில் கொலை குற்றத்துக்காக தமிழகத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி தேவராஜன்(20) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 8 ஆம் தேதியன்று தன்னுடன் வேலை பார்த்த சக தொழிலாளி ராஜூ அறிவழகன் (31) என்பவரை கொலை செய்த வழக்கில் தேவராஜனுக்கு மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தைப்பூச கொண்டாட்டத்துக்குப் பின்னர் ராஜூ அறிவழகனைக் காணவில்லை.பின்னர் அவரது உடல் மேம்பாலம் ஒன்றில் இருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவரை பெரியசாமி தேவராஜன் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இவ்வழக்கில் பெரியசாமி தேவராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்த கொலை வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக