தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.12

இந்தியாவின் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் அமெரிக்க-இஸ்ரேல் பிடி இறுகுகிறது!


புதுடெல்லி:இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க மத்திய அரசு முயன்றுவருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்மைக்கால அவசரகதியிலான இஸ்ரேலிய சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமும்இதுவாகும்
.பிராந்தியத்தில் சூழல்கள் மாறிவரும் வேளையில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கூடுதல் ஒருங்கிணைப்பு அத்தியாவசியமானது என மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.
இஸ்ரேல் இந்தியாவின் மிகப்பெரிய நட்பு நாடு என ஜெருசலத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா புகழாரம் சூட்டியிருந்தார். இருநாடுகளும் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் திறந்த மனதுடன் ஒத்துழைக்கவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தலைமையின் அதிகாரப்பூர்வ ஆதரவையும் இந்தியா கோரியுள்ளது. பாதுகாப்பு துறையில் புதிய ஒப்பந்தங்கள் விரைவில் உருவாகும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இஸ்ரேலின் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவிற்கு தெளிவான உறுதி கிடைத்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால்,ஒப்பந்தத்தின் விரிவான அம்சங்கள் குறித்து அரசு இதுவரை வெளியிடவில்லை.
இஸ்ரேலில் இருந்து ஏவுகணை, ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள், இண்டலிஜன்ஸ் அமைப்பு ஆகியவற்றை வாங்குவதற்கு 900 கோடி டாலர் தொகை மதிப்பிலான பாதுகாப்புத்துறை வர்த்தகம் நடத்தவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எரிவாயுவை ஏற்றுமதிச் செய்யவும் இஸ்ரேல் தயார் என அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக ஈரான்-பாகிஸ்தான் எரிவாயு பைப்லைன் திட்டத்தில் இருந்து இந்தியா பின்வாங்கிய சூழலில் இஸ்ரேலில் இருந்து எரிவாயுவை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான வழிகளையும் எஸ்.எம்.கிருஷ்ணா ஆராய்ந்தார்.
தற்போது கத்தர் நாட்டில் இருந்து அதிகமான எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்கிறது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்தியா உருவாக்கும் தேசிய மையத்திற்கும் இஸ்ரேல் உதவி அளிக்கும். இதுத் தொடர்பாக நேற்று முன் தினம் மத்திய அரசுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நேசனல் கவுண்டர் டெரரிஸம் செண்டர்(என்.சி.டி.சி) என்ற கொள்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முதன் முதலில் முன்வைத்தார். மும்பையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இக்கொள்கை முன்வைக்கப்பட்டது. தீவிரவாதம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைப்பதுதான் இம்மையத்தின் நோக்கமாகும்.
இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி), ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்(RAW),ஜாயிண்ட் இண்டலிஜன்ஸ் கமிட்டி,மாநில உளவுப் பிரிவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதும் இனி இந்த மையத்தின் பணியாகும்.
இஸ்ரேலுக்கும்,அமெரிக்காவிற்கும் இனி அனைத்து விபரங்களும் எளிதாக கிடைக்க அந்நாடுகளுடனான ஒத்துழைப்பு உதவிகரமாக அமையும். தேசிய பாதுகாப்பு ஆய்வு அமைப்பு, ரிசர்ச் ஆர்கனைசேசன், பாதுகாப்பு ரகசிய புலனாய்வு ஏஜன்சி, நிதித்துறை இண்டலிஜன்ஸ் யூனிட்(FIU), துணை ராணுவ பிரிவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதும் இந்த புதிய மையத்தின் பணியாகும். கிடைத்த தகவல்களை ஆராய்ந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வதிலும் அமெரிக்கா-இஸ்ரேலின் பங்களிப்பு உறுதிச் செய்யப்படும்.
உள்துறை அமைச்சர்,உள்துறை செயலாளர்,இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) தலைவர் ஆகியோருக்கு அறிக்கை அளிக்கப்படும். வருகிற மார்ச் மாதம் இம்மையத்தின் இயக்குநர் நியமிக்கப்படுவார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இயக்குநரை அனுப்பி ஒத்துழைப்பிற்கான செயல்ரீதியான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: