தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.12

இளம் பெண்ணுக்கு கைகாட்டப் போய் இத்தாலி கப்பலை கவிழ்த்தார்.. மாலுமி

ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அ வலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி..இத்தாலிக் கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன் கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான பு திய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந் தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்று ள்ளார். கப்பல்
விபத்துக்குள்ளான கிக்லியோ தீவுப்பகு தியில் இவருக்கு
தெரிந்த 25 வயதுடைய மோல்டா நாட்டு பெண்மணி ஒருவர் நின்றிருக்கிறார். இவருக்கு கை காட்டுவதற்காக கப்பலை தீவுக்கு மிக அருகே விட்டுள்ளார். இளம் பெண் ஒருவருடன் சேர்ந்து கப்பல் டெக்கில் நின்று கைகாட்டியபோது நிலமை மோசமடைந்தது. திடுக்கிட்டு தானே கப்பல் தலைமை மாலுமி என்பதை உணர்ந்து கொண்டவர் கப்பலை திருப்பும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவருடைய தகவல் கப்பலை செலுத்தியவர்களுக்குக் கிடைக்க தாமதித்தால், கப்பல் திடலில் மாட்டிக் கொண்டது. கடலில் இருந்த பாறை கப்பலை கிழித்து தாழ்த்தது.
இவர் தன்னை மறந்து கைகாட்டிய பெண்மணி முன்னர் இவருடைய கடல் பயண நண்பி என்று கூறப்படுகிறது. கண்பார்வைக்கு கடல் ஆழம்போல தெரிந்தாலும் உண்மை நிலை அப்படி இருக்கவில்லை. இந்தக் கப்பல் கவிழ்ந்ததும் தலைமை மாலுமி தப்பி ஓட ஆரம்பித்தார். கப்பல் தரைதட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இவர் இன்னொரு படகில் ஓடித்தப்பிவிட்டார். இளம்பெண்ணுடன் சல்லாபித்து கப்பலை கவிழ்த்த முட்டாளென மற்றவர் தர்மஅடி போடுவதில் இருந்து தப்பிக்கவே இப்படி ஓடினாரா என்பது முக்கிய கேள்வியாகும்.
இவர் கப்பலில் சிக்கிய 4200 பயணிகள் பற்றிய யாதொரு கவலையும் இல்லாமலே ஓட்டமெடுத்தாக இத்தாலிய மீட்பு பணியாளர் தெரிவிக்கிறார்கள். ஆனால் மரணிக்க இருந்த பல நூற்றுக்கணக்கானவரை தான் காப்பாற்றியதாக கேப்டன் கூறுகிறார். முன்னதாக கருத்துரைத்த இவர் கடல் ஆழத்தைக் காட்டும் வரைபடத்தில் கப்பல் கவிழ்ந்த பகுதி ஆழம் குறைந்த பகுதியாக காட்டப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் 20 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கடலில் மூழ்கிக் கிடக்கும் கப்பலின் அறைகளில் சிக்குண்டுள்ளார்கள். நீர் நிறைந்தால் பூட்டிய கதவைத் திறக்க முடியாதபடி நீர் அழுத்தமாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வளவு பிரமாண்டமான கப்பலுக்கு தலைமை மாலுமியாக நியமிக்கப்படும் ஒருவர் நடக்க வேண்டிய நடத்தையும், பொறுப்புணர்வும் எத்தகையது என்பதைப் புரியாமல் நடந்தால் கடமை உணர்வு மிக்க உலகளாவிய மாலுமிகளுக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி இதே தீவுக்கு 230 மீட்டர் அருகாமையில் இந்தக் கப்பலை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவருடைய உல்லாச வாழ்வும், லீலைகளும் மேலும் அம்பலமாகும் என்று தெரியவருகிறது. இத்தாலி என்ற நாட்டை ஓட்டிச் சென்ற தலைமை மாலுமியான சில்வியோ பலர்ஸ்கோனி பெண்களுடன் ஆடிய கூத்தில் நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்தடித்தது பழைய கதை, இப்போது அவர் பாணியில் இன்னொரு இத்தாலியர் ஆடிய கூத்து உலகில் சிரிப்பார் சிரிக்கிறது. இதன் பொருட்டு விசாரணைக் கமிசன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி ரெலிகிராப் எழுதியுள்ளது.

0 கருத்துகள்: