இஸ்லாமாபாத், ஜன. 20- நேட்டோ படைகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி நடத்திய விமான தாக்குதலி ல் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானார்கள். அதி லிருந்து அமெரிக்காவுக்கும்,பாகிஸ்தானுக்கும்இடை யே மோதல் நிலவி வருகிறது.இந்த நிலையில் அமெ ரிக்காவின் சிறப்பு தூதர் மார்க் கிராஸ்மேன் பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளில் இந்த வாரம் சுற்றுப்பயணம்
செய்வார் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்து இருந்தார். ஆனால், அமெரிக்க சிறப்பு தூதர் வருகைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது."இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் வருகை உகந்ததாக இருக்காது என்று மார்க் கிராஸ்மேனிடம் தெரிவித்து உள்ளோம்" என்று பாகிஸ்தானின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், என்ன காரணத்துக்காக அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று அவர் கூற மறுத்து விட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக