தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.12

மும்பை குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரும் அபுசலீம் மனு: பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கேட்கிறது


மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரு ம் அபுசலீம் மனு மீது பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கே ட்கிறது.மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒரு வன் அபுசலீம் (வயது 43). இவன் மும்பை நிழலுலக தாதாக் களில் ஒருவன் ஆவான். இவன் மீது மேலும் 8 கிரிமினல் வ ழக்குகள் நிலுவையில் உள்ளன.அவன் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு வழக்கில் கைதானான்.
பலகட்ட சட்ட போரா ட்டங்களுக்கு பின்னர்
அங்கிருந்து அவன் 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி அவனது காதலி மோனிகா பேடியுடன் நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டான். அப்போது, இந்திய கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளுக்காக அபுசலீமுக்கு மரண தண்டனை விதிக்க மாட்டோம், 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டுகளின் மீது விசாரிக்க மாட்டோம் என்ற உறுதியை போர்ச்சுக்கல் அரசுக்கு அப்போதைய மத்திய அரசு வழங்கியது.
ஆனால் அந்த வாக்குறுதிக்கு மாறாக, அபுசலீம் மீது மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்துவதாகக் கூறி, அது ஏற்கனவே இந்திய அரசு அளித்த உறுதிமொழியை மீறிய செயல் என்று கருதி, அவனை இந்தியாவுக்கு நாடு கடத்திய உத்தரவை போர்ச்சுக்கல் ஐகோர்ட்டு ரத்து செய்தது.
அதை எதிர்த்து போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அப்பீல் செய்தது. ஆனால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சி.பி.ஐ.யின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, ஏற்கனவே ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. இது சி.பி.ஐ.க்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தீர்ப்பு வெளியானவுடனே மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அபுசலீம் தடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இப்போது இது குறித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று சி.பி.ஐ. நேற்று தடா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அபுசலீமின் மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: