அரபுலீக்கின் பிரதிநிதிகளான 50 பேர் கொண்ட கண்காணிப் புக் குழுவினர் இன்று காலை எகிப்தில் இருந்து தனியார் வி மானம் ஒன்றின் மூலம் சிரியா சென்றடைந்தனர். இவர்கள் சென்று இறங்கியபோது ஏற்பட்ட ஆர்பாட்டத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமாஸ்கசிற்கு வ டக்கே உள்ள கோம்ஸ் நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தி லேயே இவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. நிலமைகளை
அறிவிதற்காக சம்பவம் நடைபெற்ற இடத்
திற்கு கண்காணிப்புக்குழு இன்று செல்கிறது. இது இவ்விதமிருக்க எகிப்தில் நடைபெற்று முடிவடைந்த மக்கள் புரட்சி ஒரு போலியான புரட்சி என்று கூறுமளவிற்கு அங்குள்ள நிலமைகள் காணப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டு காயப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்த குற்றத்திற்காக தாகிர் பிளேசிற்கு அருகில் உள்ள வைத்தியசாலைக்குள் நுழைந்த எகிப்திய படையினர் அங்கிருந்த வைத்தியர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் இரு வைத்தியர் காயமடைந்துள்ளனர். இது குறித்த பத்திரிகையாளர் மாநாட்டை டாக்டர் அமீர் சலா நடாத்தியுள்ளார். அத்தருணம் அவர் கூறும்போது எகிப்திய இராணுவத்தின் கடுமையான மிரட்டல் வலயத்தில் இப்போது தாம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வைத்தியர்கள் என்ற பணியை ஆற்றுவோர் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை புரிய முடியாத பேர்வழிகளாக இவர்கள் இருக்கிறார்கள். இதுவரை காலமும் பெரும் ஒடுக்குமுறைக்குட்பட்டிருந்த எகிப்திய மக்கள் சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்கப்போவதாகக் கூறினாலும் கூட யதார்த்தம் அவ்வாறில்லை என்பது இந்தப் படுகொலையால் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை எகிப்திய முன்னாள் சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் இராணுவத்தில் மறுபடியும் சதி புரிந்து வெளியே வரக்கூடும் என்ற அச்சம் காரணமாக அவர் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு செய்தி கூறுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக