பீஜிங், டிச. 28- சீனாவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய 36 அதிவேக புல்லட் ரெயில்கள் உள்ள ன. கடந்த ஜூலை மாதம் 2 புல்லட் ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 40 பயணிகள் உயிர் இழந்தனர். இத னை அடுத்து புல்லட் ரெயில்கள் இயக்குவது தொடர் பான புதிய திட்டங்களை நிறுத்தி வைத்தது.இந்நிலை யில் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில்
செல்லும்அதிவேக ரெயிலின் சோதனை ஓட்டத்தை சீனா கடந்த வாரம் நடத்தியது. இந்த புதிய ரெயில் தற்போதுள்ள அதிவேக ரெயில்களை விட சில சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது என ரெயில்வே நிபுணர் ஜின் ஷியாங் தெரிவித்தார்.

ரெயில் நிறுவன சேர்மன் ஷோஓ ஷியோயாங் கூறுகையில், இந்த புதிய ரெயில்கள் உச்சவேகத்தில் செல்ல வேண்டும் என்பதில்லை. ரெயில்களை பாதுகாப்பான முறையில் இயக்குவது தான் எங்கள் நோக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்த புதிய அதிவேக ரெயில்கள் விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக