பகவத் கீதைக்கு தடைவிதிக்க கோரி ரஷ்ய நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழகு தொடர்பில், இந்திய வெளியுறவு துறை அ மைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் ககா தினிடம் விவாதித்துள்ளார்.நாளை (புதன்கிழ மை) சைபீரிய நீதிம ன்றில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற உ ள்ள நிலையில் ரஷ்ய தூதர் ககாதினை அழைத்து பேசிய கிருஷ்ணா இந்த பிரச் சினையை தீர்க்க ரஷ்யா உடனடியாக உதவி செய்ய வேண்டும் என வலியுறுத் தினார்.ரஷ்ய அரசு
தனக்குள்ள அதிகாரத்தின் படி அனைத்து வழிகளிலும் தன்னால் ஆன உதவிகளை
செய்யும் என ககாதினும் உறுதி அளித்துள்ளார்.தனக்குள்ள அதிகாரத்தின் படி அனைத்து வழிகளிலும் தன்னால் ஆன உதவிகளை
இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை, இஸ்கான் நிறுவனத்தின் தலைவர் சுவாமி பிரபுபாதா, ரஷ்ய மொழியில் மொழிபெயர்துள்ளார். இதையடுத்து ரஷ்யாவில் பகவத்கீதைக்கு வரவேற்பு அதிகரித்திருந்த நிலையில், இந்த புத்தகம் சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என கோரியும், இப்புத்தகத்துக்கு ரஷ்யா தடை விதிக்க கோரியும் ரஷ்யாவிம் டாம்ஸ்க் நகர நீதிமன்றில் வழக்கொன்று தொடரப்பட்டது. எனினும் நூலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் ஹிந்து மத அறிஞர்களை கலந்தாலோசிக்கவில்லை.
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது என இஸ்கான் அமைப்பினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை இப்புத்தகத்துக்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு ரஷ்யாவில் வாழும் இந்தியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இதேவேளை இப்புத்தகத்துக்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு ரஷ்யாவில் வாழும் இந்தியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக