அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரானும் பொறுப்பாகும் என நியூயோர்க் நீதிபதியொருவர் அளித்த தீர்ப்பை ஈரானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.இத்தாக்குதல்களுக்கு அல் கதாடா, தலிபான் அமைப்புகளுடன் ஈரானும் பொறுப்பாகும் என நியூயோர்க் மன்ஹெட்டன் நகர நீதிபதி ஜோர்ஜ் டானியல்ஸ் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்திருந்தார்.இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் 100 பில்லின் டொலர் நஷ்ட ஈடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அல் கயீதாவுக்கு ஈரான் புகலிடமளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இது அமெரிக்காவில் உருவாக்கப்படும் அருவருப்பான காட்சியாகும் என ஈரான் இத்தீர்ப்பை விமர்சித்துள்ளது.
ஈரானில் அல் கயீடா பிரசன்னம் எதுவுமில்லை என ஈரானிய அரசாங்கப் பேச்சளார் ரமீன் மெஹ்மன்பரஸ்ட் வலியுறுத்தினார்.
செப்டெம்பர் 11 தாக்குதல்களுடன் ஈரானுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுவதை ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடிநெஜாத் பல தடவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக