தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.11

மத்திய கிழக்கை இனியும் இஸ்ரேல் குழப்பியடிக்கக்கூடாது – அமெரிக்கா


மத்திய கிழக்கு வட்டகையில் இஸ்ரேல் ஒரு சண்டியனாகவும், இணைவாக்கமடைய முடியாத மனோநிலை கொண்ட வன்முறைக் குழந்தை போலவும் இருந்துள்ளது. இந்த நிலையை மாற்றி இஸ்ரேல் மத்திய கிழக்கு அரசியல், சமுதாய மனோநிலையைப் புரிந்து கொண்டு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். போரின் மூலம் ஒரு போதை பெற்று அதை வைத்து வாழ்ந்தது போதும். இனிமேல் போரில்லாமல் நட்பாக வாழவும் வழியிருப்பதை
இஸ்ரேல்உணர்ந்து நடைபயில வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனீற்றா தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது பாலஸ்தீன பிரச்சனையில் ஓர் அமைதி ஏற்பட வேண்டுமானால் முதலில் துருக்கி, எகிப்து ஆகிய இரு நாடுகளுடனும் நட்பை வளர்க்க வேண்டும், அதற்கு இஸ்ரேல் தயாராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 21ம் நூற்றாண்டில் சர்வதேசத்தின் செயற்பாடுகள் எப்படிப் போக வேண்டுமென ஒரு டிசைன் போடப்பட்டுவிட்டது. அதற்கு அமையவே உலகின் அனைத்து நாடுகளின் அசைவும் அமைய வேண்டும். அதற்கு இஸ்ரேல் மட்டும் விதிவிலக்கல்ல என்றும் தெரிவித்தார். இது இவ்விதமிருக்க எகிப்தில் நடைபெற்ற தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் 62 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். சுமார் எட்டு மில்லியன் மக்கள் வாக்களித்திருப்பது கடந்த கால வரலாற்றில் இல்லாத முன்னேற்றம் என்று எகிப்திய தேர்தல் ஆணையர் அப்டில் மேஸ் இப்ராகிம் தெரிவித்தார். மறுபுறம் ஈரானில் நிலமை மோசமடைந்து வருகிறது. பிரிட்டன் அரசு தனது நாட்டில் உள்ள ஈரானிய தூதரகத்தை மூடிவிட்டு செல்லும்படி அறிவித்துள்ளது. மறுபுறம் ஈரானில் இருந்து வெளியேறும் பிரிட்டனை செத்துத் தொலை என்று ஈரானியர்கள் கூறி வழியனுப்பிய நிகழ்வும் நடந்தது.
அதேவேளை இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிகளும் இதுபோலவே தீட்டப்பட்டிருக்கும் என்பதும் தெரிந்ததே. இப்போது அரசு – கூட்டமைப்பு பேச்சுக்கள் முறிந்ததாகவும், பின் சேர்ந்ததாகவும் அரசும் கூட்டமைப்பும் நாடகம் ஆட வேண்டிய நிலை உள்ளது. இன்று விலகுவது போல ஆடிய கூட்டமைப்பின் நாடகம் நாளை முடிவடையலாம். இரு தரப்பும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் காதுகளில் இருவரும் பூ வைக்க வேண்டிய கடமையை செவ்வனே செய்துவருவத பாராட்டப்பட வேண்டிய திறமையாகும்.

0 கருத்துகள்: