தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.11

மண்ணை அள்ளி தூற்றி யாரோ செய்த குற்றத்திற்கு அப்துல் ரகுமானை சிறையில் அடைத்து விட்டார்களே-அப்துல் ரகுமான் குடும்பத்தினர்

திருமங்கலம் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆலம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்வானி ரதயாத்திரை செல்லும் வழியில் வைக்கப்பட்ட இந்த பைப் வெடிகுண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குண்டு வைத்த வழக்கில் போலீஸ் பக்ருதீன் உள்பட பலரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் பைப்
வெடிகுண்டு வைக்க வாகனம் மற்றும் அதற்கான பொருட்கள் வாங்க உதவி செய்த மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற அப்துல்லா, சிம்மக்கலைச் சேர்ந்த இஸ்மத் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களது இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை கைப்பற்றினார்கள்.
கைது செய்யப்பட்ட இருவரும் திருமங்கலம் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த வாரம் அப்துல்லா வேலூர் சிறைக்கும், இஸ்மத் சேலம் சிறைக்கும் மாற்றப்பட்டனர்.இந்த நிலையில் அவர்கள் இருவரும் நேற்று மீண்டும் திருமங்கலம் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். முதலில் இஸ்மத்தையும் பின்னர் வேலூரிலிருந்து வந்த அப்துல் ரகுமானை நேர் நிறுத்தினார்கள். இருவரையும் 16&ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்தனர். மனுவில் எந்த ஒரு காரணமும் இன்றி வேலூர், மற்றும் சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தனிமையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும்,  மற்ற கைதிகளைப்போல அவர்களையும் வைக்கக்கோரி மனுவில் கூறியிருந்தனர். மனுவை ஏற்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் அந்த மனு மீதான விசாரணையை 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நீதிமன்றத்தில் இருந்து இருவரையும் காவலர்கள் வெளியே அழைத்து வந்து காவல் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது குடும்பத்தினர் அவர்களைப்பார்த்து கதறி அழுதார்கள். அப்துல் ரகுமான் குடும்பத்தினர் மண்ணை அள்ளி தூற்றி யாரோ செய்த குற்றத்திற்கு அப்துல் ரகுமானை சிறையில் அடைத்து விட்டார்களே என கூறி அழுதனர். இவர்களை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த வந்தபோது மட்டும் அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

0 கருத்துகள்: