தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.11

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபை தீர்மான

வாஷிங்டன், டிச. 4-  ஈரான் அணுசக்தியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தாக்கப்பட்டது. இதனை அடுத்து இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் நாட்டுடன்தூதரகஉறவுமுறித்துவருகின்றன.இதற்கிடையில்

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை கொண்டு வர அமெரிக்கா முடிவெடுத்தது. இதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் ஒரு மனதாக நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 100 ஓட்டுகள் பதிவானது. எதிராக ஒரு ஓட்டு கூட விழவில்லை.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து ஈரான் மத்திய வங்கியுடன், வெளிநாட்டு வங்கிகள் வர்த்தகம் வைக்க தடை விதிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: