தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.11

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்கொய்தா தலைவர்


அல்கொய்தா அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாகிரி(Al-Zawahiri) வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: 70 வயது அமெரிக்கரான வாரென் வென்ஸ்டீன்(Warren Weinstein) என்பவரை கடந்த ஆகஸ்டு மாதம் 13ந் திகதி அல்கொய்தா அமைப்பு பாகிஸ்தானில் கடத்தியது.இவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளின் மேல்
நடத்தப்படும் வான்வழி தாக்குதல்களை நிறுத்த வேண்டும்
எனவும், உலக வர்த்தக மையத்தை தகர்த்ததாக 1993ம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களையும், ஒசாமா பின்லேடனின் உறவினர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஒபாமா எல்லாவற்றிலும் பொய்யான வாக்குறுதிகளையே வெளியிடுகிறார், அவரை நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: