ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த 2007ம் ஆண்டு பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நேரங்களில் பள்ளிலேயே குழுவாக இணைந்து தொழுகை நடத்தினர்.அப்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி தொழுகை நடத்தவில்லை என்று கூறி மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு பெர்லின் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த தடை விதித்தார்.நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில், பள்ளி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் வகையில் உள்ள செயல்களை அனுமதிக்க முடியாது. வகுப்பு நடக்காத நேரங்களில் கூட பள்ளியின் அமைதி கெடும் வகையில் பிரார்த்தனை நடத்த கூடாது.
மேலும் இஸ்லாமிய மாணவர்களுக்காக தனி அறையையும் பள்ளி நிர்வாகம் ஒதுக்கித்தர இயலாது. பள்ளியின் சுற்றுச்சூழல் பிரச்னைக்கு வழிவகுப்பதாய் இருக்க கூடாது. இந்த தீர்ப்பு இந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக