தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.11

சிபிஐயின் மெயில்களை திருடும் சீனா : விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே


புது தில்லி : உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனும் போர்வையில் தனி மனித சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதாகவும் தனி நபர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் மின்னஞ்சல்களையும் கண்காணிப்பதன் மூலம் அவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே பரபரப்பு தகவலை தெரிவித்தார்.லண்டனிலிருந்து வீடியோ கான்பரசிங் மூலம் பேசிய அசாஞ்ஜே தன் உரையில்
மேலும் இந்தியாவின் சிபிஐமற்றும் மத்திய அரசின் மெயில்களை ஹேக் செய்து தகவல்களை சீனா உறிஞ்சுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சீனா இக்காரியத்தை செய்வதாகவும் உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் மின்னஞ்சல்களையும் தொலைபேசிகளையும் கண்காணிப்பது தீவிரவாதிகளை பிடிப்பதற்காக அல்ல என்றும் தங்கள் அரசின் வளர்ச்சிக்கே என்றும் கூறினார்

அமெரிக்க நிறுவனங்களான லாக்ஹீட் மார்டின் மற்றும் போயிங் போன்றவைகள் இது மாதிரி தகவல்களை திருடி விற்பதில் முண்ணணியில் உள்ளன என்றும் எச்சரித்த அசாஞ்சே தீவிரவாதம் எனும் மாயை இவர்களின் சதித்திட்டத்தை மறைக்கவே என்றும் கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல்படுத்தியதின் மூலம் மேற்கு நாடுகளை விட தனி நபர் சுதந்திரம் இந்தியாவில் மேம்பட்டதாக இருக்கிறது என்றும் அசாஞ்சே கூறினார்.

0 கருத்துகள்: