தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.11

அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான்!

அமெரிக்காவின் ஆளில்லாஉளவுவிமானமொன்று ஈரான்இராணுவத்தினரால்சுட்டுவீழ்த்தப்பட்டிருப் பதாக ஈரான் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.ஈரானிய வான்வெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குறித்த

அமெரிக்கவிமானம் பறந்ததாகவும், இது உளவு பார்ப்பதற்காக நாட்டுக்குள் வந்திருக்கலாம் எனவும் ஈரானிய இராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன. சுட்டுவீழ்த்தப்பட்ட குறித்த விமானம் சேதங்களுடன், ஈரான் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.  இதேவேளை கடந்த ஜூலை மாதமும் அமெரிக்க வேவு விமானம் ஒன்றை தாம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக அணு ஆயுத உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தியிருந்த இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளடங்களான வல்லாதிக்க நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வந்தன.
ஈரான் ஆணு ஆயுதத் தயாரிப்பில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணு சக்தி அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

 இந்நிலையில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து இங்கிலாந்து தனது நாட்டிலிருந்து ஈரானிய உயரதிகாரிகளை வெளியேற்றிருந்தது.

அதே போன்று கடந்த புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள தூதரக அதிகாரிகளை ஜெர்மனி தனது தாய்நாட்டிற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தது. தமது நாட்டில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் புலனாய்வு தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்க வேவுவிமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

0 கருத்துகள்: