இனம் புரியாத இராட்சத கட்டமைப்பு வடிவங்கள் இருப்பதை கூகுள் வரைபடம் மூலம் (Google Map) கண்டுபிடித்துள்ளார்கள் இணையத்தள வாசகர்கள்.
முதலாவது படத்தில், பாரிய வெள்ளை நிற உலோக கோடுகள் காணப்படுகின்றன. இவை ஏதாவது இராணுவ பயிற்சி அல்லது ஆராய்ச்சிக்காக பதியப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இயந்திரத்தினால், அல்லது ஏதும் வெள்ளை நிற
பூச்சுக்களால் இவைஉருவாக்கப்பட்டிருக்கலாம். சீனாவில் உள்ள திபெத்திய பீடபூமியை குறுக்கே கடந்து, கும்டாக் காட்டுப்பகுதி நோக்கி செல்லும், ஷூல் நதிக்கு அருகாமையில், டுன்ஹுவாங் எனும் இடத்தில் இந்த இராட்சத வெள்ளைக்கோடுகள் பதியப்பட்டிருக்கின்றன. அவை 3000 அடி அகலம் கொண்ட ஒரு மைல் நீளத்திற்கு காணப்படுகின்றன.
ஒருவேளை அது ஒரு இலக்காகவோ அல்லது, சீனாவின் உளவு செயற்கை கோளுக்கான ஒரு அளவுத்திருத்த கட்டமாக இருக்கலாம் என எதிர்வு கூறுகிறார்கள்.
இரண்டாவது படம், ஷூல் நதியின் வடக்கே காணப்படுகிறது. இராட்சத சதுரக்கட்டங்களாக இது இருக்கிறது. கொஞ்சம் பெரிதாக்கி பார்த்தால், சுற்றிவர அழிவடைந்த நிலையில் உள்ள வாகனங்களை காணமுடிகிறது.
அமெரிக்காவின் அலஸ்காவிலிருக்கும், சூரிய உதயம் சார்ந்த ஆராய்ச்சி திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட HAARP ஐ போன்று இது ஒரு மின்சார நிலையமாக அல்லது வானொலி நிலையமாக இருக்கலாம் என்கிறார்கள்.
மூன்றாவது படம் இன்னமும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆயிரக்கணான கட்டங்கள் சுமார் 18 மைல் நீளத்திற்கு பதியப்பட்டுள்ளன.
நான்காவது படம், முதலாவது படத்தை ஒத்ததாக காணப்படுகிறது.
ஐந்தாவது படம் : ஏதோ ஒரு இலக்கு மையமாக இருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது. சுற்ற்வட்டப்பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கி பார்த்தால், மையப்பகுதியில் விமானங்கள் சில தரித்து நிற்பது தெரிகிறது.
ஆறாவது படம், ஏதோ, விமான நிலைய கட்டமைப்பு போன்று இருக்கிறது. ஆனால் பிரகாசமாக பளபளக்கிறது. தண்ணீரால் நிரப்பபட்டோ அல்லது, ஏதும் வயர் உலோகத்தினால் உருவாக்கப்பட்டோ இருக்கலாம். அருகிலும் அதே போன்ற கட்டமைப்பு காணப்படுகிறது.
ஏழாவது படம் ; குறைந்தது 10 மைல் நீளத்திற்கு காணப்படுகிறது. பார்ப்பதற்கு நீச்சல் தடாகம் போன்றிருந்தாலும், பெரிதாக்கி பார்க்கும் பொது அணு உலைகளில் காணப்படுவது போன்று இரண்டு குளிரூட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவையனைத்தும், சீனாவின் மத்திய பாலைவன பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், சீனா தனது ஏதோ ஒரு திட்டத்தை உலகத்துக்கு தெரியாமல் மறைமுகமாக செய்து முடிக்க பார்க்கிறதா என கேள்வி எழுந்துள்ளதாக கூறுகிறது கிஸ்மொடோ இணையத்தளம்.

சீனாவின் மத்திய பாலைவனப்பகுதியின் கற்பாறை மற்றும் தரை பகுதிகளில்,

கூகிள் மேப் இணைப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக